புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவி, ரசிகர்களை சீரியல்கள் மூலம் எப்படி கட்டிப்போட வைப்பது என்பதை நன்றாக தெரிந்து வைத்துள்ளார்கள்.
அதற்கு ஏற்ப எல்லா சீரியல்களும் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படி இப்படியொரு ரகசியமா, அடுத்து இது எப்படி நடக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கும் வண்ணம் ஒளிபரப்பாகும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.
தர்ஷன் திருமண பரபரப்பு எப்படியோ கடந்த வாரம் முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்து ஈஸ்வரியை குணசேகரன் தாக்கிய வீடியோ ஜனனி, சக்தியிடம் கிடைக்குமா, இராமேஸ்வரம் என்ன விஷயம் என நிறைய கேள்விகளுடன் தொடர் ஒளிபரப்பாகிறது.
புரொமோ
இன்றைய எபிசோடின் புரொமோவில், ஜனனி-சக்தியிடம் வீடியோ கொடுக்க வந்த கெவின் நண்பருக்கு ஒரு போன் கால் வந்தது.
அதில் நீ நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பணம் கொடுக்கிறேன் வீடியோ என்னிடம் வர வேண்டும் என கூற அவர் புதிய என்ட்ரி கொடுக்கும் நபரிடம் வீடியோவை கொடுத்துவிடுகிறார்.
அவர் யார் என்பது தெரியவில்லை, இன்னொரு பக்கம் நந்தினி-ரேணுகா, சக்திக்கு கிடைத்த கடிதம் படித்து ஷாக் ஆகிறார்கள்.
கதிருக்கு குணசேகரன் போன் செய்து ஜனனி-சக்தி நமக்கு எதிராக நடக்கிறார்கள் என ஷாக்கிங் விஷயம் கூறுகிறார்.