பிளாக்பஸ்டர் மங்காத்தா படம் ரீ ரிலீஸ்.. வெளிவந்த மிரட்டலான புதிய டிரைலர்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்து 2011ஆம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா. அஜித்துடன் இணைந்து அர்ஜுன் முதல் முறையாக இப்படத்தில் நடித்திருந்தார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமி, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, மகத் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.
மாபெரும் வெற்றிபெற்ற மங்காத்தா படத்தை தற்போது ரீ ரிலீஸ் செய்கின்றனர். வருகிற 23ஆம் தேதி ரீ ரிலீஸாகும் இப்படத்தின் புதிய டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ நீங்களே பாருங்க:






