பிரம்மாண்டமான விஷுவல்ஸ்.. சிவராத்திரி அன்று வெளிவந்த நாகபந்தம் படத்தின் மிரட்டலான டிரைலர்..

விராட் கர்ணா நடிப்பில் இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் நாகபந்தன் – The Secret Treasure. இப்படத்தில் நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற சம்மருக்கு திரையரங்கில் வெளியாகயுள்ளது. ஒரு படத்தின் அறிவிப்போ அல்லது அப்படத்தை பற்றிய ஏதாவது முக்கிய அப்டேட்டாக இருந்தால், நல்ல நாளில் வெளியிடுவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதுவும் நாகபந்தன் படம் இந்து புராணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதால், இன்று சிவராத்திரியில் இப்படத்தின் டிரைலர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதற்கு வேர்ல்ட் ஆஃப் நாகபந்தம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த வீடியோ:






