பாகுபலி வில்லன் உடல் இப்படி ஆனது ஏன்? அவரே சொன்ன காரணம்

பாகுபலி படத்தில் வில்லனாக, பிரமாண்ட தோற்றத்தில் நடித்து இருந்தவர் ராணா. தெலுங்கு நடிகரான அவர் 6.2 அடி உயரம், 120 கிலோ எடை என மிரட்டலான லுக்கில் அப்போது இருந்தார்.
ஆனால் பாகுபலி 2 ரிலீசுக்கு பிறகு ராணா ஆளே மாறிவிட்டார். அவர் மிக மிக ஒல்லியான தோற்றத்திற்கு மாறி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆனார்கள்.
காரணம்
இது பற்றி பேசி இருக்கும் ராணா தான் பாகுபலி 2 ரிலீசுக்கு பிறகு கிட்னி failure மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்ததாக கூறி இருக்கிறார்.
கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால், தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் இருந்தும் வெளியேறி அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துவிட்டாராம்.
அந்த நேரத்தில் தனது இமேஜ், ஸ்டார் அந்தஸ்து போன்றவற்றில் எல்லாம் தனது கவனம் இருக்கவில்லை, உயிர் பிழைத்தால் போதும் என்கிற மனநிலையில் தான் இருந்தேன் என கூறி இருக்கிறார்.
ஒரு வருடம் அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வேறொரு ஆளாக, ஒல்லி லுக்கில் இந்தியா வந்து இறங்கினாராம்.
தோற்றம் மாறிவிட்டதால் ஒப்புக்கொண்ட படங்களில் கூட நடிக்க முடியாமல் போனது எனவும் ராணா வருத்தமாக தெரிவித்தார்.






