பாகுபலி பிரபாஸின் ராஜா சாப் படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாகுபலி பிரபாஸின் ராஜா சாப் படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு


பாகுபலி படத்திற்கு பின் பான் இந்தியன் ஸ்டாராக மாறி, வசூல் நாயகனாக கலக்கிக்கொண்டு இருக்கிறார் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சலார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

பாகுபலி பிரபாஸின் ராஜா சாப் படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Prabhas Raja Saab Movie Release Date Announcement

ராஜா சாப்

அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம்தான் ராஜா சாப். இயக்குநர் மாருதி இயக்கியுள்ள இப்படத்தை People Media Factory நிறுவனம் தயாரித்துள்ளனர்.

பாகுபலி பிரபாஸின் ராஜா சாப் படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Prabhas Raja Saab Movie Release Date Announcement

முதல் முறையாக ஹாரர் கதைக்களத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரசிகர்கள் பெரிதும் இப்படம் எதிர்பார்க்கப்படுகிறது.

ரிலீஸ் தேதி

இந்த நிலையில், பிரபாஸின் ராஜா சாப் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் எப்போது என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, வருகிற ஜூன் 16ம் தேதி இப்படத்தின் டீசர் வெளிவரும் என அறிவித்துள்ளனர். மேலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி ராஜா சாப் ரிலீஸ் என்றும் அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *