பல வருடங்களுக்கு பின்பு மீண்டும் சந்தித்துக்கொண்ட ராமராஜன்

ராமராஜன் – கனகா
1989ஆம் ஆண்டு இயக்குநர் கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகி வெளிவந்த படம் கரகாட்டக்காரன்.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிகை கனகா அறிமுகமானார். இவர் பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் ஆவார். தனது மகள் படம் நடிப்பதில் அவருக்கு பெரிதும் விருப்பம் இல்லை என்றாலும், அவர் நடிக்க ஒப்புக்கொண்டார்.
ஆனால், கனகா நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ராமராஜன் – கனகா ஜோடியை ரசிகர்கள் கொண்டாடினார்கள். டாப் நடிகையாக 80ஸ்-களில் வலம் வந்த கனகா திடீரென சினிமாவிலிருந்து விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அவர் என்ன ஆனார் என்பதே பலருக்கும் தெரியவில்லை.
இதன்பின், பல வருடங்களுக்கு பின் பிரபல நடிகை குட்டி பத்மினி நடிகை கனகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. கரகாட்டக்காரன் பட கதாநாயகி கனகாவா இது என பலரும் அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
கரகாட்டக்காரன் ஜோடி
இந்த நிலையில், தற்போது நடிகர் ராமராஜனுடன் நடிகை கனகா எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், கரகாட்டக்காரன் ஜோடி ரீ யூனியன் என புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.






