பலரும் எதிர்பார்த்த ரவி மோகனின் காதலிக்க நேரமில்லை படத்தின் OTT ரிலீஸ்.. எப்போது தெரியுமா

ரவி மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரவி மோகன். இவர் நடிப்பில் வெளிவந்த கடந்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில், ரவி மோகன் நடிப்பில் சமீபத்தில் காதலிக்க நேரமில்லை என்ற படம் வெளியானது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து முதல் முறையாக நித்யா மேனன் நடித்திருந்தார்.
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வினய், யோகி பாபு, டி.ஜே. பானு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
எப்போது தெரியுமா
தற்போது இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வரும் 11-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளது.