பராசக்தி எப்படி இருக்கு.. படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ

பராசக்தி
சிவகார்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகிய மூவரும் முதல் முறையாக கைகோர்த்துள்ள திரைப்படம்தான் பராசக்தி. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்க ஸ்ரீலீலா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மேலும், மலையாள நடிகர் பேசில் ஜோசப் மற்றும் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என கூறப்படுகிறது.
ரசிகர்கள் விமர்சனம்
இந்த நிலையில், இன்று திரையரங்கங்களில் வெளியாகியுள்ள பராசக்தி படத்தை பார்த்துள்ள ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, படத்தின் முதல் பாதி டல்லாக இருக்கிறது. இடைவேளை காட்சி ஓகே. இரண்டாம் பாதிக்காக காத்திருக்கிறேன் என பதிவு செய்துள்ளனர். அதே போல் மறுபுறம், இரண்டாம் பாகம் நன்றாக உள்ளது, குறிப்பாக இடைவேளை காட்சி சூப்பர் என்றும் சிலர் பதிவு செய்துள்ளனர்.






