படையப்பா ரீ ரிலீஸ்: ஆறு நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா

படையப்பா
படையப்பா படத்தின் ரீ ரிலீஸ் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. முதல் மூன்று நாட்களில் வசூலில் பட்டையை கிளப்பியது.
அதன்பின் சற்று சரிவை சந்தித்துள்ளது. ஆனால், ரீ ரிலீஸில் இப்படியொரு வரவேற்பா என அனைவரையும் வாயடைக்க செய்துள்ளது.
வசூல் விவரம்
ரீ ரிலீஸாகியுள்ள படையப்பா திரைப்படத்தின் வசூல் பற்றிய விவரம் முதல் நாளில் இருந்தே பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஆறு நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் இப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஆறு நாட்களில் படையப்பா திரைப்படம் உலகளவில் ரூ. 16.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






