நூறு சாமி திரைப்படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

நூறு சாமி
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் ஸ்வாசிகா இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் நூறு சாமி.
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜய், சக்தி, பாலாஜி சக்திவேல், காவ்யா அனில் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இறுதி வசூல்
கடந்த ஜூன் மாதம் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வரவேற்பையே பெற்றது.
இந்த நிலையில், நூறு சாமி திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 20 கோடி இறுதியாக வசூலித்துள்ளது. இது இப்படத்திற்கான ஆவரேஜ் கலெக்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.






