நீ என்ன அமீர் கானா.. அப்பாவே திட்டினார்: நடிகர் விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக பாப்புலர் ஆகி அதன் பின் பல ஹிட் படங்கள் கொடுத்து இருக்கிறார்.
அவர் கடைசியாக நடித்த லால் சலாம் படம் தோல்வி தான் என்றாலும் அடுத்து அவர் நடிக்கும் படங்கள் மீது பெரிய எதிர்பார்ப்புடன் இருக்கிறார்.
அப்பா திட்டினார்
இந்நிலையில் சமீபத்தில் விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் தனது அப்பா பற்றி பேசி இருக்கிறார். “எனது அம்மா சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை. அதனால் நான் தொடர்ந்து படங்கள் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என அவர் நினைத்தார்.”
“நான் ஆரம்பகட்டத்தில் சில படங்களை நிராகரித்தபோது, ‘நீ என்ன அமீர் கானா.. வருஷத்துக்கு ஒரு படம் மட்டும் நடித்து அதை ஹிட் ஆக்குவதற்கு. இப்படியே போனால் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவாய்’ என அப்பா திட்டினார்.
ஆனால் தற்போது அவர் என்னை நம்புகிறார் எனவும் விஷ்ணு விஷால் கூறி இருக்கிறார்.