நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?… அய்யனார் துணை எபிசோட்

அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியலில் வரும் வீடும் ஒரு அடையாளமாக இருந்தது.
அந்த வீட்டில் நிலா வந்தபிறகு நிறைய அழகான சம்பவங்கள் எல்லாம் நடந்தது, நடேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த வீட்டைவிட்டு வெளியேறிய போது ரசிகர்களே அந்த வீட்டில் நடந்த நிகழ்வுகளை நினைத்துப்பார்த்தார்கள் என்றே கூறலாம்.
கதையோடு ஒன்றிணைந்தது அய்யனார் துணை வீடு. தற்போது நடேசனிடம் உயில் இல்லாததால் போலீஸை வைத்து அந்த வீட்டிற்கு சீல் வைத்து விட்டனர் அவருடன் பிறந்தவர்கள்.
எபிசோட்
வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்டவர்கள் தற்போது ஹோட்டலில் தங்கியுள்ளனர். நிலா-சோழன் இருவரும் உயில் தேடி வீட்டிற்கு வந்தனர். முதலில் பாண்டி-பல்லவனை வைத்து ஒரு பிளான் போட்டவர்கள் கடைசியில் இரவு சீல் வைத்த வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்தனர்.
சோழன் வீடு முழுவதும் தேடியதில் நடேசனுக்கு அவரது அப்பா எழுதிய உயில் கிடைக்கிறது. அதை நிலா படித்து பார்க்கையில் நடேசனுக்கு தான் அந்த வீடு என தெளிவாக எழுதியுள்ளது என சந்தோஷப்படுகிறார்.
உயிலுடன் இருவரும் ஹோட்டல் வருகிறார்கள், இரவு யாரையும் தொந்தரவு செய்யாமல் படித்துவிடுகிறார்கள்.
இந்த காட்சிகளுக்கு இடையில் சோழன்-நிலாவின் கியூட்டான சண்டையும் இடம்பெறுகிறது.






