நயன்தாரா பெயரில் இருக்கும் தியேட்டர்.. கிருஷ்ணகிரியில் இருக்கும் சிறந்த தியேட்டர்கள்

கிருஷ்ணகிரி என்றால் மாம்பழம் தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். சென்னை – பெங்களூர் என இரண்டு நகரங்களுக்கும் இடையில் அமைந்து இருக்கும் கிரிஷ்ணகிரியில் இருக்கும் சில சிறந்த தியேட்டர்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
நயன்தாரா தியேட்டர்
இது நடிகை நயன்தாராவின் தியேட்டர் இல்லை. புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த தியேட்டரில் ஏசி, சீட் உள்ளிட்ட வசதிகள் சிறப்பாக இருப்பதாக சினிமா ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
சாந்தி தியேட்டர்
2K, Dolby 7.1 உடன் இருக்கும் இந்த தியேட்டர் கிருஷ்ணகிரியில் முக்கிய தியேட்டர்களில் ஒன்று. இருப்பினும் ஏசி இல்லை என்பது இந்த தியேட்டர் மீது பலரும் வைக்கும் விமர்சனம்.
அப்சரா தியேட்டர்
கிருஷ்ணகிரியில் இருக்கும் பழமையான தியேட்டர்களில் ஒன்று. குஷன் சீட் இல்லை, சின்ன ஸ்கிறீன், ஏசி இல்லை போன்ற சில குறைபாடுகளை சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர்.