நடிகை ஸ்ரீதேவியின் சென்னை பங்களா.. போலி வாரிசு சான்றிதழ் மூலம் மோசடி! போனி கபூர் வழக்கு

நடிகை ஸ்ரீதேவியின் சென்னை பங்களா.. போலி வாரிசு சான்றிதழ் மூலம் மோசடி! போனி கபூர் வழக்கு


நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர். லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு முன்னணி ஹீரோயினாக வலம் வந்த அவர் 2018ல் துபாயில் அவரது ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார்.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் பிரபல தயாரிப்பாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். மேலும் அவரது மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இருவரும் தற்போது படங்களில் நடித்து வருகின்றனர்.

நடிகை ஸ்ரீதேவியின் சென்னை பங்களா.. போலி வாரிசு சான்றிதழ் மூலம் மோசடி! போனி கபூர் வழக்கு | Sridevi Chennai Property Boney Kapoor Complaint

போனி கபூர் புகார்

நடிகை ஸ்ரீதேவி சென்னை ஈசிஆர் பகுதியில் 1988ல் ஒரு சொத்து வாங்கி இருந்தார். அந்த பீச் ஹவுஸ் நீச்சல் நீச்சல் குளத்துடன் மிக பிரம்மாண்டமாக இருக்கிறது.

இந்நிலையில் போலியான வாரிசு சான்றிதழ் மூலம் அந்த சொத்தை மூன்று பேர் உரிமை கோருவதாக போனி கபூர் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்.

அந்த போலியான வாரிசு சான்றிதழ்களை ரத்து செய்ய கோரிய நிலையில் அது பற்றி தாம்பரம் தாசில்தார் 4 வாரங்களில் முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. 

GalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *