நடிகை ராதிகா வீட்டில் துயர சம்பவம்.. கண்ணீரில் குடும்பம்

நடிகை ராதிகா சரத்குமார் மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மகள். ஹீரோயினாக பல படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் குணச்சித்திர ரோல்களில் அவர் நடித்து வருகிறார்.
குறிப்பாக அம்மா ரோல்களில் அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
அம்மா மரணம்
நடிகை ராதிகாவின் அம்மா கீதா ராதா கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (21.09.2025) இரவு 9.20 மணிக்கு காலமானார்.
இதனால் ராதிகா குடும்பம் தற்போது கண்ணீரில் இருக்கிறது.
இறுதி சடங்குகள் சென்னை போயஸ் கார்டனில் இருக்கும் அபார்ட்மெண்டில் தொடங்கி பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.