நடிகை சாய் பல்லவிக்கு நன்றி சொன்ன ரன்பீர் கபூர்.. இது தான் காரணமா?

ராமாயணம்
ராக்கிங் ஸ்டார் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து உலகளவில் புகழ்பெற்ற காவியமான ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கின்றனர்.
நிதிஷ் திவாரி இயக்கும் இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர்.
அதை தொடர்ந்து கன்னட நடிகர் யாஷ் ராவணனாக நடிக்கும் இந்த படத்தை ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும் இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகிறது.
இது தான் காரணமா?
இந்நிலையில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பில் ரன்பீர் கபூர் சாய் பல்லவி, யாஷ் ஆகியோரை பாராட்டி நன்றி சொன்னார்.