நடிகை கயாடு லோஹர் கைவசம் உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா?.. கலக்குகிறாரே!

கயாடு லோஹர்
இந்த ஆண்டு தமிழில் வெளியான டிராகன் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை கயாடு லோஹர்.
இவர் மலையாளத்தில் அறிமுகமாகி இன்று தென்னிந்திய அளவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக இதயம் முரளி படம் தமிழில் உருவாகி வருகிறது.
இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹருக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.
என்னென்ன தெரியுமா?
அதன்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் 5 படங்களில் நடித்து வருவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்தார். மேலும், சிம்புவுடன் ஒரு படத்திலும் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.