நடிகை கடத்தல் வழக்கு.. திலீப் விடுதலையான நிலையில் 6 பேருக்கு தண்டனை அறிவிப்பு

நடிகை கடத்தல் வழக்கு.. திலீப் விடுதலையான நிலையில் 6 பேருக்கு தண்டனை அறிவிப்பு

பிரபல நடிகையை காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருந்து நடிகர் திலீப்பை விடுதலை செய்திருந்தது நீதிமன்றம். அவர் 8வது குற்றவாளியாக அந்த வழக்கில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

முதல் குற்றவாளியான பல்சர் சுனி என்கிற சுனில் உட்பட 6 பேர் குற்றவாளி எனவும் நீதிமன்றம் அறிவித்து இருந்த நிலையில் இன்று அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.

நடிகை கடத்தல் வழக்கு.. திலீப் விடுதலையான நிலையில் 6 பேருக்கு தண்டனை அறிவிப்பு | Actress Assault Case 6 Convicts Get 20 Years Jail

20 வருடம் சிறை

6 பேருக்கான தண்டனையை நீதிபத்தில் ஹனி வர்கீஸ் அறிவித்தார். நடிகையை கடத்தி வன்கொடுமை செய்த குற்றத்தை நேரடியாக செய்த 6 பேருக்கும் 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறையில் இருக்க வேண்டும்.
 
திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேலுமுறையீடு செய்ய கேரள அரசு முடிவெடுத்து இருக்கிறது.

நடிகை கடத்தல் வழக்கு.. திலீப் விடுதலையான நிலையில் 6 பேருக்கு தண்டனை அறிவிப்பு | Actress Assault Case 6 Convicts Get 20 Years Jail

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *