நடிகர் விஜய்யின் பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா, அடேங்கப்பா

விஜய்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜனநாயகன் திரைப்படம் வெளிவரவுள்ளது.
இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க வர கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது. மேலும் அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் இதுவே விஜய்யின் கடைசி படமாகும்.
விஜய்யின் வீடு
விஜய்யின் சொத்து மதிப்பு, அவர் பயன்படுத்தும் கார், படத்திற்காக வாங்கும் சம்பளம் என அவரின் லைஃப் ஸ்டைல் குறித்து தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் விஜய் தற்போது வாழ்ந்து வரும் பிரம்மாண்ட வீட்டின் விலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நீலாங்கரையில் விஜய்யின் பிரம்மாண்ட வீடு உள்ளது என்பதை நாம் அறிவோம். இந்த நிலையில், விஜய்யின் இந்த பிரம்மாண்ட வீட்டின் மதிப்பு ரூ. 80 கோடி என கூறப்படுகிறது.
ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் புளோரிடா கடற்கரை வீட்டின் நேர்த்தியான வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு, அதே போல் தனது வீடும் இருக்க வேண்டும் என நீலாங்கரையில் விஜய் வீடு கட்டியதாக சொல்லப்படுகிறது.