நடிகர் ரஜினியா இது! மேடையில் நடனமாடி பட்டையை கிளப்பிய சூப்பர்ஸ்டார்.. வீடியோ இதோ

ரஜினி
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு கூலி திரைப்படம் வெளிவந்தது.
இப்படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்திருந்தாலும் கூட வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. கூலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர் 2.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இப்படம் வெளிவரும் என தகவல் தெரிவிக்கின்றனர்.
ஜெயிலர் 2 படத்திற்கு பின் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரஜினி – கமல் படம் உருவாகும் என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.
Unseen வீடியோ
திரையுலக நட்சத்திரங்களின் Unseen வீடியோ அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் ரஜினிகாந்த் பாட்ஷா படத்தில் இடம்பெறும் ஆட்டோகாரன் பாடலுக்கு மேடையில் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1996ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற திரைப்பட கலை விழாவில் ரஜினிகாந்த் நடனமாடிய வீடியோதான் இது. இதோ அந்த வீடியோ..
ரஜினி மாதிரி இல்ல பிரண்ட்ஸ் ரஜினியே தான்,
1996 லா சிங்கப்பூர்ல நடந்த திரைப்பட கலை விழாவில் 🥰🥰🥰
All Rajini fans 🫰💕💐🥰 pic.twitter.com/5nQWKlGQ6k— Amutha (@Amutha74247715) September 17, 2025