நடிகர் யாஷ் பாடிகார்டுக்கு இத்தனை லட்சம் சம்பளமா? அதிர்ச்சி ஆன ரசிகர்கள்

நடிகர் யாஷ் கேஜிஎப் படத்தின் மூலமாக இந்திய அளவில் பேசப்படும் நடிகராக மாறிவிட்டார். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் கிடைத்திருக்கிறது.
அடுத்து அவர் ராமாயணம் படத்தில் இராவணன் ஆக நடிக்க இருக்கிறார். மேலும் அவர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
பாடிகார்ட் சம்பளம்
நடிகர் யாஷுக்கு பாதுகாவலராக இருந்து வரும் ஸ்ரீனிவாஸ் என்பவரது சம்பளம் பற்றிய விவரம் தான் தற்போது எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஸ்ரீநிவாஸுக்கு மாத சம்பளமாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் யாஷ் கொடுக்கிறார் என கூறப்படுகிறது. இவ்வளவு சம்பளம் வாங்கும் அவர் சொகுசு கார், பைக் என இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் போட்டோக்களும் இணையத்தில் வைரல் ஆகின்றன.