நடிகர் மாதவனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா, முழு விவரம் இதோ

கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலமான நடிகர்களில் ஒருவர் மாதவன். இவர் மணி ரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
இதை தொடர்ந்து மின்னலே, டும் டும் டும், ரன், அன்பே சிவம், ஆயுத எழுத்து, யாவரும் நலம், விக்ரம் வேதா, இறுதிச்சுற்று என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
நடிகராக வலம் வந்த இவர் Rocketry: The Nambi Effect படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்கினார்.
இந்த நிலையில், மாதவனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய சொத்து மதிப்பு ரூ. 115 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.