நடிகர் தனுஷ் யாருடன் ஹோலி கொண்டாடி உள்ளார் பாருங்க.. வைரல் புகைப்படங்கள்

நடிகர் தனுஷ் யாருடன் ஹோலி கொண்டாடி உள்ளார் பாருங்க.. வைரல் புகைப்படங்கள்


தனுஷ்

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முகம் கொண்டவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியானது.

அதை தொடர்ந்து, இட்லி கடை என்ற திரைப்படம் உருவாகி வருகின்றன. தற்போது தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 – ம் தேதி வெளிவர உள்ளது.

நடிகர் தனுஷ் யாருடன் ஹோலி கொண்டாடி உள்ளார் பாருங்க.. வைரல் புகைப்படங்கள் | Dhanush Holly Photos Goes Viral

இதற்கிடையே பாலிவுட்டிலும் தேரே இஷ்க் மெயின் என்ற ஒரு படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சனோன் கமிட்டாகியிருக்கிறார்.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே தனுஷ் ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேற்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது.

வைரல் புகைப்படங்கள் 

இதில்,  நட்சத்திரங்கள் பலர் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றது. இந்நிலையில், ஆனந்த் எல்.ராய், கீர்த்தி சனோன், தனுஷ் ஆகியோர் ஷூட்டிங்கில் ஒன்றாக ஹோலி கொண்டாடி உள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.       

GalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *