நடிகர் கமல்ஹாசன் மகள் பெயரில் மோசடி.. அதிர்ச்சி புகார்

நடிகர் கமல்ஹாசன் மகள் பெயரில் மோசடி.. அதிர்ச்சி புகார்


நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அவரது இரண்டு மகள்களும் நடிகைகளாக தான் இருக்கின்றனர்.

ஸ்ருதி ஹாசன் தற்போது பிசியாக படங்கள் நடித்து வருகிறார். கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் தனுஷ் உடன் ஷமிதாப், அஜித்துடன் விவேகம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் தற்போது எந்த புது படங்களிலும் அவர் நடிக்கவில்லை.

நடிகர் கமல்ஹாசன் மகள் பெயரில் மோசடி.. அதிர்ச்சி புகார் | Akshara Haasan Name Misused Files Complaint

மோசடி

இந்நிலையில் தற்போது அக்ஷரா ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தின் பெயரை பயன்படுத்தி ஒரு நபர் மோசடி செய்து வருவதாக புகார் அளித்திருக்கிறார் அக்ஷரா.

அக்ஷரா படம் தயாரிக்கப் போவதாகவும் அதற்காக ஊட்டியில் ஆபீஸ் இருப்பதாகவும் இப்ராஹிம் அக்தர் என்ற ஒரு நபர் மோசடியாக பலரிடம் கூறி ஏமாற்றி வருகிறாராம்.

“அது முற்றிலும் பொய்யான தகவல், அவருடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை, இது பற்றி சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.”

“அதனால் அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்” என அக்ஷரா ஹாசன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *