நடிகர் அதர்வாவுக்கு எப்போது திருமணம்.. விஷால் பெயரை குறிப்பிட்டு அவரே கூறிய பதில்

நடிகர் விஷால் 48 வயதாகும் நிலையில் சமீபத்தில் தான் நடிகை சாய் தன்ஷிகாவை நிச்சயதார்த்தம் செய்தார். அவர்கள் திருமணமும் விரைவில் நடைபெற இருக்கிறது.
“நடிகர் அதர்வா தான் பேச்சிலர் ஆக இருக்கிறார், அடுத்து அவர் தான் திருமணம் செய்ய வேண்டும்” என நடிகர் விஷால் ஒரு பேட்டியில் கூறி இருந்தார். அது பற்றி அதர்வாவின் பட விழாவில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதர்வா பதில்
“விஷால் சார் எப்போ திருமணம் செய்கிறாரோ, எப்போ தாலி காட்டுகிறாரோ, அதற்கு பிறகு தான் நான் தாலி கட்டுவேன்” என அதர்வா கூறி இருக்கிறார்.
நடிகர் சங்க கட்டிடம் பணிகள் இன்னும் முடிவடையாததால் விஷால் திருமணம் தற்போது தள்ளிப்போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.