தீபாவளி படத்தை ரிலீஸ் செய்ய என்ன தகுதி உள்ளது என்கிறார்கள்… எங்களிடம், ஹரிஷ் கல்யாண் பேச்சு

டீசல் திரைப்படம்
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக அதாவது கடந்த வருடம் லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி இருந்தது.
படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கண்டது. அப்படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் டீசல்.
ஹரிஷ் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
நடிகர் பேட்டி
தனது படம் முதன்முறையாக தீபாவளி அன்று ரிலீஸ் ஆவதை தொடர்ந்து சந்தோஷத்தில் இருக்கும் ஹரிஷ் கல்யாணை கஷ்டப்படுத்தும் வகையில் ஒரு சிலர் பேசியிருக்கின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற டீசல் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் ஹரிஷ் கல்யாண் பேசும்போது, என் தயாரிப்பாளரிடம் ஒரு பத்து நாட்களுக்கு முன்பு ஒருவர் டீசல் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் அளவிற்கு என்ன தகுதி இருக்கு? பெரிய ஹீரோ இருக்காரா? பெரிய இயக்குனர், நாயகி இருக்காங்களா? அப்படி இருக்க என்ன தகுதியில் டீசல் படத்தை தீபாவளி ரிலீஸ் செய்றீங்க என கேட்டுள்ளார்.
அப்படி தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண என்ன தகுதி வேண்டும் என எனக்கு தெரியவில்லை. நல்ல கதை, சுவாரஸ்யமான கதை, அருமையான கன்டன்ட் இருந்தால் போதும், ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகின்றேன் என்று மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார்.