திருமணம் நாளை, ஆனால் வீட்டைவிட்டு சேரன் வீட்டிற்கு வந்த கார்த்திகா… அய்யனார் துணை பரபரப்பு புரொமோ

அய்யனார் துணை
அய்யனார் துணை, விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்.
கடந்த வாரம் அய்யனார் துணை சீரியலில் சேரன் குடும்பத்தினர் ஏற்காடு சென்றனர், அங்கு நிலாவின் அம்மா-அப்பா குடும்பத்துடன் வர அங்கு சில பிரச்சனைகள் வருகிறது. கொஞ்சம் ஜாலி, கொஞ்சம் சண்டையோடு ஏற்காடு எபிசோட் முடிவுக்கு வருகிறது.
அடுத்த கதைக்களத்தில் கார்த்திகாவின் திருமண விசேஷம் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
புரொமோ
தற்போது வந்த அய்யனார் துணை புரொமோவில், கார்த்திகாவின் திருமணத்தை நினைத்து சேரன் தனியாக உட்கார்ந்து அழுகிறார்.
திடீரென கார்த்திகா சேரன் வீட்டிற்கு வந்து அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என கதறுகிறார், இதனால் நிலா மற்றும் குடும்பத்தினர் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார்கள்.