திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்! 41 வயது நடிகை சதா ஓபன் டாக்

திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்! 41 வயது நடிகை சதா ஓபன் டாக்


நடிகை சதா

ரவி மோகன் நடிப்பில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை சதா. இதன்பின் அந்நியன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த சதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சினிமாவிலிருந்து காணாமல் போனார். கடைசியாக தமிழில் இவர் நடித்திருந்த படம் டார்ச்லைட். இதன்பின் தெலுங்கில் இரு திரைப்படங்கள் நடித்தார்.

திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்! 41 வயது நடிகை சதா ஓபன் டாக் | Actress Sadha Talk About Her Marriage

சினிமாவிலிருந்து விலகி தற்போது முழுமையாக புகைப்பட கலைஞராகியுள்ளார் சதா. வன விலங்குகள், பறவைகளை புகைப்படம் எடுத்து வருகிறார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவ்வப்போது பதிவிடுவார்.

திருமணம் 

இந்த நிலையில், 41 வயதாகும் நடிகை சதா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அவரை பார்க்கும் ரசிகர்கள் பலரும், எப்போது திருமணம் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதனால் தனது திருமணம் குறித்து நடிகை சதா பேசியுள்ளார்.

திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம்! 41 வயது நடிகை சதா ஓபன் டாக் | Actress Sadha Talk About Her Marriage

இதில் “திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம். திருமணத்தின் மீது எனக்கு ஆசையும் இல்லை நம்பிக்கையும் இல்லை. புகைப்பட துறையில் இன்னும் சாதிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. அதன் பின்தான் திருமணத்தை பற்றி யோசிப்பேன்” என கூறியுள்ளார். திருமணம் குறித்து நடிகை சதா பேசியது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *