திடீரென முக்கிய சீரியல் ஒளிபரப்புவதை நிறுத்திய ஜீ தமிழ்… ரசிகர்கள் ஷாக்

ஜீ தமிழ்
ஜீ தமிழில் வள்ளியின் வேலன், கெட்டி மேளம், மாரி, அண்ணா, மௌனம் பேசியதே, மனசெல்லாம், கார்த்திகை தீபம், வீரா, இதயம் 2, நினைத்தாலே இனிக்கும் என தொடர்ந்து நிறைய வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
இன்று ஜீ தமிழ் சீரியல் முடிவுக்கு வருவது குறித்து ஒரு தகவல் வந்தது.
அதாவது சித்து-ஸ்ரேயா ஜோடியாக நடித்துவரும் வள்ளியின் வேலன் தொடர் விரைவில் கிளைமேக்ஸ் எட்ட இருப்பதாக தகவல்கள் வந்தன.
நிறுத்தப்பட்ட தொடர்
வள்ளியின் வேலன் கிளைமேக்ஸ் செய்தி வெளியான நிலையில் இன்னொரு ஷாக்கிங் தகவல் வந்துள்ளது.
அதாவது ஜீ கன்னட சீரியலின் டப்பிங் தொடரான ராமன் தேடிய சீதை தொடர் இன்று முதல் நிறுத்தப்பட உள்ளதாம். இது ரசிகர்களுக்கு ஷாக்கிங் செய்தியாக அமைந்துள்ளது.