தாய் கிழவி திரை விமர்சனம்

தாய் கிழவி திரை விமர்சனம்


தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெண்களை மையப்படுத்தி வரும் படங்கள் நிறைய வர, அதில் சிறப்பம்சமாக சீனியர் ஹீரோயின் ராதிகாவை தாய் கிழவியாக மாற்றி அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேஷன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த தாய் கிழவி எப்படி? பார்ப்போம்.

தாய் கிழவி திரை விமர்சனம் | Thaai Kizhavi Review

கதைக்களம்



ராதிகா பவுனுதாயி என்ற தாய் கிழவியாக ஊரில் எல்லோருக்கும் வட்டிக்கு விட்டு எல்லோரையும் மிரட்டி தினமும் பணத்தை வசூல் செய்கிறார்.ஊரே இவர் எப்போது இறப்பார் என காத்திருக்கிறது.


அருள்தாஸ், பால சரவணன், சிங்கம்புலி என 3 மகன் மற்றும் ஒரு மகள் ராதிகாவுக்கு இருக்கின்றனர். இவர்கள் எல்லோரும் அம்மா எப்போது இறப்பார் சொத்தை அடையாளம் என காத்திருக்க, மகள் மட்டும் கணவரை விட்டு அம்மாவிற்காக வீட்டோடு வாழ்ந்து வருகிறார்.

தாய் கிழவி திரை விமர்சனம் | Thaai Kizhavi Review

இந்த கட்டத்தில் ராதிகாவுக்கு உடல்நிலை மிக மோசமாக இன்னும் 2 தினங்களில் இறக்க போகிறார் என ஊரே திரண்டு வர அங்கு தான், ராதிகா 160 பவுன் சேர்த்து வைத்துள்ளது மூன்று மகன்களுக்கு தெரிய வருகிறது.


இதனால் அந்த நகையை தங்கள் சகோதரி மற்றும் அவர் மாப்பிள்ளைக்கு தெரியாமல் எடுக்க ப்ளான் போட, அதன் பிறகு நடக்கும் கூத்தே இந்த தாய் கிழவி.

தாய் கிழவி திரை விமர்சனம் | Thaai Kizhavi Review

படத்தை பற்றிய அலசல்


ராதிகா தாய் கிழவி கதாபாத்திரம் நடித்துள்ளார் என்பதை விட வாழ்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும், படம் முழுவதுன் படுத்த படுக்கையாக இருந்தாலும் தனக்கு கிடைத்த இடத்தில் அட்டகாசம் செய்துள்ளார், ஊரில் ஒவ்வொருவரும் அவரை பார்த்து தெறித்து ஓடும்படி காட்டியதற்கு அவர் கதாபாத்திரமும் செம.

ராதிகா மட்டுமில்லை பால சரவணன், அருள் தாஸ், சிங்கம்புலி இவர்களுடைய மகள்கள், ஏன் ஒரு குடிகார கேரக்டரில் வருபவர் கூட பின்னி பெடல் பெர்ப்பாமன்ஸ் தான், அதிலும் சிங்கம்புலி கமல் ரசிகராக அவர் போடும் பாடல்கள் இடைவேளை, கிளைமேக்ஸ் எல்லாம் சரவெடி கொண்டாட்டம் தான்.

தாய் கிழவி திரை விமர்சனம் | Thaai Kizhavi Review


படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் ராதிகா படுத்த படுக்கையாக அட இனிமே என்ன என்று யோசித்தால் அதை வைத்தே பெண்ணியம், சம உரிமை எல்லாம் நமக்கு இயக்குனர் பாடம் எடுத்தது அதை கிளைமேக்ஸில் ராதிகா வாயிலே சொல்ல வைப்பது என அட்டகாசம்.


அதிலும் பெண் சும்மா இல்லாம எதாவது வேலை செய்ய வேண்டும், அது தான் அவளை கடைசி வரை காப்பாற்றும், அது தான் உண்மையான சுதந்திரம் போன்ற வசனங்கள் அப்லாஸ் அள்ளுகிறது.

அதோடு மருத்துவமனையில் வட இந்திய டாக்டர் ஒருவர் ஆங்கிலம் தெரியாதவர்களிடம் ஆங்கிலத்தில் பேச, அதை பெரிய டாகடர் ஒருவர் கண்டித்து மத்தவங்களுக்கு தெரியாத மொழியில் பேசி பந்தா காட்டுவது பெருமை இல்லை, பைத்தியகாரத்தனம் என சொல்லும் இடம் சூப்பர்.

தாய் கிழவி திரை விமர்சனம் | Thaai Kizhavi Review

படம் முழுவதும் நகைச்சுவை, எமோஷ்னல் என அறிமுக படத்திலேயே அவுட் ஆப் தி கிரவுண்ட் சிக்ஸர் அடித்துள்ளார்.

டெக்னிக்கல் விஷயங்கள் ஒளிப்பதிவு அப்படியே அந்த ஊர் மக்கள், இடம் , கலாச்சரம் என அனைத்தையும் கண்முன் கொண்டு வந்துள்ளார். நிவாஸ் கே பிரச்சன்னா இசை பிரமாதம்.



க்ளாப்ஸ்


படத்தின் கதைக்களம்


ராதிகா மற்றும் படத்தில் நடித்த அனைவரின் பங்களிப்பும்


வசனங்கள்


பல்ப்ஸ்


முதல் பாதி கதைக்குள் செல்லும் வரை கொஞ்சம் பொறுமையாகவே செல்வது.


மொத்தத்தில் தாய் கிழவி பெண் என்று பேசினால் போதாது, ஜெயித்து காட்டனும் என படத்தில் சொன்னது போல் ஜெயித்தும் காட்டிவிட்டார்கள்.  

தாய் கிழவி திரை விமர்சனம் | Thaai Kizhavi Review


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *