தாய் கிழவி திரைப்படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

தாய் கிழவி திரைப்படத்தின் இறுதி வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்


முன்னணி இயக்குநர்களை விட அறிமுக இயக்குநர்கள் பலரும் சமீபகாலமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். அபிஷன் ஜீவிந்த், மதன், கென் கருணாஸ், கீர்த்திஸ்வரன் என பலரும் தங்களது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளனர்.

தாய் கிழவி

அந்த வரிசையில், சமீபத்தில் வெளிவந்த தாய் கிழவி படத்தின் மூலம் அறிமுக இயக்குநராக வெற்றி கண்டவர் இயக்குநர் சிவகுமார் முருகேசன். இப்படத்தில் ராதிகா சரத்குமார் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

இவருடன் இணைந்து முனீஸ்காந்த், ரேச்சல் ரெபேக்கா, அருள்தாஸ், சிங்கம்புலி, பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்திருந்தார்.

இறுதி வசூல்

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வெளிவந்த இப்படம் இதுவரை 31 நாட்களை கடந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தாய் கிழவி திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 85 கோடி வசூல் செய்துள்ளது. இதுவே இப்படத்தின் இறுதி வசூல் ஆகும். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *