தலைவன் தலைவி பட ஹிட், சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி… எத்தனை கோடி தெரியுமா?

தலைவன் தலைவி
தமிழ் சினிமாவில் இந்த வருடம் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வருகிறது.
குறைந்த பட்ஜெட்டில் தரமான கதைக்களத்தை கொண்டு வரும் படங்கள் மக்களிடம் நல்ல விமர்சனம் பெற பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி இருக்கிறது.
அப்படி பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி-நித்யா மேனன் நடிக்க வெளியான படம் தலைவன் தலைவி. குடும்ப பாங்கான கதைக்களத்தை கொண்ட இப்படம் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
சம்பளம்
இந்த படம் நல்ல ஹிட்டடிக்கவே விஜய் சேதுபதி தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் படத்திற்காக இருவருமே சம்பளத்தை உயர்த்தி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.