தமிழ் சினிமாவில் 1996ம் ஆண்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்கள்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பான படங்கள் வெளியாகும்.
அப்படி நாம் 90களில் வெளியான சிறந்த படங்களின் விவரத்தை பார்த்து வருகிறோம். அப்படி நாம் இப்போது 1996ம் ஆண்டில் வெளியான சிறந்த படங்களின் விவரத்தை காண்போம்.
அவ்வை சண்முகி
கே.எஸ்.ரவிக்குமார்-கமல்ஹாசன் கூட்டணி வெளியான ஒரு சிறந்த படம். ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவலாக இப்படம் எடுக்கப்பட்டது.
கிரேசி மோகன் கதை என்றால் சும்மாவா, காமெடி வசனங்களில் பூந்து விளையாடி இருப்பார். அதோடு தேவா இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களுமே செம ஹிட் தான்.
இந்தியன்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹான், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம். 1995ம் ஆண்டு வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது இந்தியன்.
பட கதை, ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் என பல வகையில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த படம் ஆஸ்கர் விருதின் பரிந்துரைக்காக இந்தியா சார்பில் இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
காதல் கோட்டை
அஜித் திரைப்பயணத்தில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம். பார்த்து காதல், பேசி காதல் என்று நாம் படங்கள் பார்த்து வர பார்க்காமல் காதல் வரும் என்பதை அழகான கதைக்களத்துடன் எடுத்திருப்பார் அகத்தியன்.
அஜித், தேவயானி, ஹீரா மற்றும் பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு தேவா தான் இசை. காதல் கோட்டை படத்திற்காக அகத்தியன் தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.
பூவே உனக்காக
விக்ரமன் இயக்கத்தில் குடும்பம், சென்டிமென்ட், மதத்தை தாண்டி காதல் போன்ற விஷயங்களை காட்டிய படம்.
விஜய், சங்கீதா மாதவன், நாகேஷ், சார்லி, ஜெய் கணேஷ், மலேசியா வாசுதேவன் என பலர் நடித்த இப்படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்துள்ளார்.
படு சூப்பர் ஹிட்டாக ஓடிய இப்படம் அப்போது ரூ. 9.38 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
காதல் தேசம்
காதல் பற்றிய கதை தான், ஆனால் கல்லூரி காலத்தை வைத்து கதை அமைய பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
வினீத், அப்பாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், தபு, சின்னி ஜெயந்த் என பலர் நடிக்க கதிர் இயக்கி இருந்தார், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார்.