தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த வரலாற்றுப் படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த வரலாற்றுப் படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அந்த வகையில், தமிழ் சினிமாவில் சிறந்த வரலாற்றுப் படங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

பொன்னியின் செல்வன் 1& 2:

பிரம்மாண்ட படைப்பாக கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க மணி ரத்னம் இயக்கியிருந்தார்.

அமரர் கல்கி எழுதிய நாவலை மையமாக கொண்டு பொன்னியின் செல்வன் 2 பாகங்களாக வெளிவந்தது. இதில் 2022ஆம் ஆண்டு முதல் பாகமும், 2023ஆம் ஆண்டு இரண்டாம் பாகமும் வெளிவந்தது.

தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த வரலாற்றுப் படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ | Best Historical Movies In Tamil

விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர்.

தங்கலான்:

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான திரைப்படம் தங்கலான்.

விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

கேஜிஎப் பின்னணியில் வெளிவந்த இந்த கதை உண்மை சம்பவத்தை மையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. அங்கு வாழ்ந்த மனிதர்களை பற்றி சில புகைப்படங்களை பா. ரஞ்சித் படத்தின் இறுதியில் பகிர்ந்திருந்தார்.

தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த வரலாற்றுப் படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ | Best Historical Movies In Tamil

ஆயிரத்தில் ஒருவன்:

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த வரலாற்றுப் படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ | Best Historical Movies In Tamil

ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்த சமயத்தில் மக்கள் மத்தியில் தோல்வியை தழுவினாலும், தற்போது ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

அசுரன்:

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அசுரன். பிரபல நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் 2019ஆம் ஆண்டின் சிறந்த படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இப்படத்தில் வெற்றிமாறனுடன் நடிகர் தனுஷ் கைகோர்த்தார். மேலும், இந்த படத்தில் மஞ்சு வாரியார், பசுபதி, ஆடுகளம் நரேன், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த வரலாற்றுப் படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ | Best Historical Movies In Tamil

7ஆம் அறிவு:

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக சூர்யா நடித்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 7ஆம் அறிவு. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் அறிமுகமானார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சூர்யா திரை வாழ்க்கையில் இன்றும் பேசப்படும் அளவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றது.  

தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த வரலாற்றுப் படங்கள் என்னென்ன.. லிஸ்ட் இதோ | Best Historical Movies In Tamil

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *