தனது அடுத்த படத்தை தொடங்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி.. வீடியோ இதோ

தனது அடுத்த படத்தை தொடங்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி.. வீடியோ இதோ


எஸ்.எஸ்.ராஜமௌலி

தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி மக்களை வியப்பில் ஆழ்த்தியவர் தான் எஸ்.எஸ்.ராஜமௌலி.

நான் ஈ, பாகுபலி, ஆர்ஆர்ஆர் என அடுத்தடுத்து தான் இயக்கும் படங்களில் பிரம்மாண்டத்தை காட்டி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார்.

ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது எல்லாம் கிடைக்க படக்குழுவினர் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் இருந்தனர்.

தனது அடுத்த படத்தை தொடங்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி.. வீடியோ இதோ | Ss Rajamouli Starts His Next Film

அடுத்த படம்

RRR படத்தில் நடித்தவர்கள் அடுத்த படங்களே நடித்து ரிலீஸ் செய்துவிட ராஜமௌலி புதிய படம் குறித்து தகவலே வராமல் இருந்தது. ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபுவை வைத்து தான் படம் இயக்குகிறார், கீரவாணி இசையமைக்கிறார்.

இந்த படத்தில் நாயகியாக ஹாலிவுட் வரை சென்று கலக்கும் பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது புதிய படத்தின் சூட்டிங்கையும் ராஜமௌவி தொடங்கிவிட்டதாக தெரிகிறது, அவரது மகன் அதற்கான ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.  

தனது அடுத்த படத்தை தொடங்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி.. வீடியோ இதோ | Ss Rajamouli Starts His Next Film




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *