ட்ரெண்டிங்கில் இணைந்த சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

ட்ரெண்டிங்கில் இணைந்த சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ


சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா, கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் மே 1ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலர் நடித்துள்ளனர்.

ட்ரெண்டிங்கில் இணைந்த சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ | Suriya Retro Movie Video Goes Viral

வைரலாகும் வீடியோ 

இந்நிலையில், ஸ்டோன் பெஞ்ச் கிரியேசன்ஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படம் குறித்து ஒரு அதிரடி வீடியோவை இயக்குநர் இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், “ரெட்ரோ டப்பிங் முடுஞ்சுது கட் அண்ட் ரைட்டு” என சூர்யா பேசியுள்ளார். அதற்கு பின்னர் டப்பிங்கின் போது சூர்யாவுக்கு அருகில் கார்த்திக் சுப்புராஜ் நின்று கொண்டு இருக்கிறார்.

ட்ரெண்டிங்கில் இணைந்த சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ | Suriya Retro Movie Video Goes Viral

இப்படியான நிலையில் இருவரும் சிரித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை Ghibli ஸ்டைலில் மாற்றி அதன் மூலம் டப்பிங் பணிகள் முடிவடைந்து விட்டதாக வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *