ட்யூட் திரைப்படம் எதைப்பற்றிய கதை… பிரதீப் ரங்கநாதன் ஓபன் டாக்

ட்யூட் படம்
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் டிராகன்.
குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சனங்களும் அமோகமாக வர ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.
இப்பட வெற்றியை தொடர்ந்து பிரதீப் 2 படங்களில் நடித்து வருகிறார், விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐகே மற்றும் ட்யூட் திரைப்படம்.
அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ள ட்யூட் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகயுள்ளது.
இப்படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜு நாயகியாக நடிக்க சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
பட கதை
தீபாவளி ஸ்பெஷலாக வரும் அக்டோபர் 17ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பிரதீப் ரங்கநாதன் பேசும்போது படம் எதை நோக்கிய கதை என கூறியுள்ளார்.
இன்னொருவரை சந்தோஷப்படுத்தி அதில் சந்தோஷப்படுபவர்களை பற்றிய படம்தான் ட்யூட் என கூறியுள்ளார்.