டிராகன் திரை விமர்சனம்

டிராகன் திரை விமர்சனம்


லவ் டுடே என்ற பிரமாண்ட ஹிட் படத்தை தொடர்ந்து ப்ரதீப் மீண்டும் ஹீரோவாக இந்த முறை ஓ மை கடவுளே என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஸ்வத்-துடன் இணைந்துள்ள இந்த ட்ராகனும் வெற்றியை ருசித்ததா, பார்ப்போம்.

கதைக்களம்

ப்ரதீப் 12-வதில் நன்றாக படித்து 96% எடுத்து மெரீட்ல் ஒரு கல்லூரிக்கு செல்கிறார். ஆனால், பள்ளியில் நன்றாக பிடித்த தன்னை ஒரு பெண் வேண்டாம் என சொல்லியதால் கல்லூரியில் அடாவடி செய்யும் பையனாக வலம் வருகிறார்.

அதோடு 48 அரியர் வைத்து அனுபமாவை காதலித்து கல்லூரி ப்ரொபசர் மிஷ்கினை எதிர்த்து வாழ்க்கையையே வைப் செய்து வருகிறார். தன்னுடன் படித்தவர்கள் எல்லாம் வேலைக்கு போக, இவர் பிக்பாஸ் பார்த்து பொழுது கழிக்கிறார்.

இதனால் அனுபமா ப்ரதீபை ப்ரேக் அப் செய்ய, இனி அவளுக்கு முன்பு நன்றாக வாழ வேண்டும் என போலி சான்றிதழ் தயார் செய்து 3 லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார்.

வாழ்க்கையில் எல்லாம் செட்டில் ஆக, ஒரு நாள் மிஷ்கின் ப்ரதீபை பார்த்து, போலி சான்றிதழ் குறித்து பேச, ப்ரதீப் காலில் விழுந்து கெஞ்சுகிறார்.

அப்போது மிஷ்கின் சரி 48 அரியரை இப்போது க்ளியர் செய், மீண்டும் உன் தப்பை திருத்து, நான் உன்னை விடுகிறேன் என சொல்ல, பிறகு ப்ரதீப் என்ன செய்தார் என்பதே மீதிக்கதை.
 

படத்தை பற்றிய அலசல்

ப்ரதீப் அப்படியே அந்த கால தனுஷ் தான். அவரின் காமெடி டைமிங், காதலிப்பது, ப்ரேக் அப் ஆவது அதற்காக ஃபீல் செய்வது என தனுஷை அப்படியே பிரதிபலிக்கிறார், அதே சமயம் ரசிக்கவும் வைக்கிறார். கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு ப்ரதீப் ஒரு நல்வரவு தான், ஏன் அடுத்த சென்சேஷன் என்று கூட சொல்லலாம்.

அனுபமா முதலில் வெறும் காட்சி பொருள் போல் வழக்கமான ஹீரோயினாக வந்து சென்றாலும், இரண்டாம் பாதியில் ப்ரதீப் அரியரை க்ளியர் செய்ய அவர் செய்யும் உதவிகள் அழகாக எடுத்துள்ளனர்.

இயக்குனர் அஸ்வத் இந்த கால ட்ரெண்ட் என்ன என்பதை அறிந்து அதில் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். விஜே சித்து, ஹர்ஷத் கான் ஆரம்பித்து பேட் பேன் ரவி, ஜோ மைக்கல் என பல யூடியூப் பிரபலங்களை அங்கங்கே வர வைத்து கைத்தட்டல் வாங்குகிறார்.

அதே நேரத்தில் மிஷ்கினும் ஒரு ப்ரொபசராக எல்லோரும் டான் எஸ் ஜே சூர்யா என்று நினைத்தால், அட இது கதையே வேறு என அவரும் சிறப்பாக செய்துள்ளார்.

ஆரம்பத்தில் படம் கெத்து பையன், பெண்களை திட்டுவது என சென்றாலும் இரண்டாம் பாதியில் இவை அனைத்தையும் ப்ரதீப் ரியலைஸ் செய்யும் இடம் சூப்பர்.

அதிலும் ப்ரதீப் அப்பாவாக வரும் மரியம் ஜார்ஜ் கடைசி வரை தன் மகனுக்காக நிற்பது. இதற்காக அவர் காலில் விழுந்து ப்ரதீப் அழுவது என எமோஷ்னலாகவும் ஸ்கோர் செய்துள்ளனர்.

என்ன இவ்வளவு ப்ளஸ் இருக்கும் படத்தில் கெட்ட வார்த்தைகள், கிளாமர் காட்சிகளை குறைத்து 16+ இல்லாமல் எல்லா ஏஜுக்குமான படமாக கொடுத்திருக்கலாம்.

படத்தின் வசனம், அனுபவத்துல சொல்றது எல்லாம் பூமர் ஆக தான் தெரியும் போன்ற இந்த தலைமுறைக்கான வசனம் சூப்பர். vj சித்து, ஹர்ஷத் கான் போன்ற இளம் நடிகர்கள் தங்கள் பொறுப்பு உணர்ந்து அசத்தியுள்ளனர்.

டெக்னிக்கலாக ஒளிப்பதிவு செம கலர்புல், இசை பின்னி பெடல் எடுகிறது. 

க்ளாப்ஸ்


ப்ரதீப் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் என நிரூபித்துள்ளார்.


மற்ற நடிகர், நடிகைகள் நடிப்பு.

டெக்னிக்கல் விஷயங்கள்

இரண்டாம் பாதி, குறிப்பாக எமோஷ்னல் காட்சிகள்.

பல்ப்ஸ்


கெட்ட வார்த்தை, சில கிளாமர் காட்சிகள்.


மொத்தத்தில் இந்த டிராகன் Fire Fire Fire தான். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *