டாக்டர் ஆக ஆசைப்பட்ட பிரபல ஹீரோயின்.. ஆனால் நிறைவேறாமல் போன கனவு.. ஏன்?

மமிதா பைஜூ
மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பின் தொடர்ந்து படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை மமிதா பைஜூ.
இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்ட இவர், ப்ரேமலு என்ற ஹிட் படத்தை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துக் கொண்டார்.
தற்போது, தமிழில் தளபதி விஜய்யுடன் இணைந்து தளபதி 69 படத்தில் நடித்துள்ளார். மேலும், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 46, பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் என பல படங்களில் நடிக்கவுள்ளார்.
ஏன்?
இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை மமிதா பைஜூ பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், ” டாக்டர் ஆக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், சினிமாவில் நடிக்க வந்துவிட்டேன். சினிமாவுக்கு வந்த பின்பும் டாக்டர் ஆகும் கனவு இருந்தது.
ஆனால், 7 படங்களில் நடித்தபின் அந்த கனவை கைவிட்டு விட்டேன். முதலில் அதற்காக அப்பா வருத்தப்பட்டார். ஆனாலும் ஆதரவு கொடுத்தார். காரணம், அவர் நடிகராக நினைத்தார். ஆனால் அவர் டாக்டர் ஆகிவிட்டார். என் அப்பா நன்றாக படிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.