ஜோதிகா செய்யலாம் ஆனால் என் பொண்ணு செய்தால் தப்பா?.. வனிதா விஜயகுமார் ஆதங்கம்

ஜோதிகா செய்யலாம் ஆனால் என் பொண்ணு செய்தால் தப்பா?.. வனிதா விஜயகுமார் ஆதங்கம்


வனிதா 

பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். மின்னல் வந்து செல்வது போல் சினிமாவில் நுழைந்து பின் உடனே காணாமல் போனார்.

பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தார், இந்த நிகழ்ச்சிக்கு பின் தொடர்ந்து ஆக்டீவாக சினிமாவில் பயணித்து வருகிறார்.

வனிதா தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ என்ற படத்தை இயக்கி உள்ளார்.

ஜோதிகா செய்யலாம் ஆனால் என் பொண்ணு செய்தால் தப்பா?.. வனிதா விஜயகுமார் ஆதங்கம் | Vanitha Open Talk About Jyothika

ஆதங்கம் 

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ப்ரமோஷனில் வனிதா கலந்து கொண்டு பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” என்னுடைய மகள் ஜோவிகா மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது பாவாடை தாவணி அணிந்திருந்தார்.

அப்போது அவரின் இடுப்பு தெரிகிறது என்று சொல்லி சிலர் கலாய்த்து இருந்தனர். குஷி படத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஜோதிகா இடுப்பை காட்டி பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

அதே என் மகள் செய்தால் பெரிதாக பேசப்படுகிறது. என் மகள் அழகாக உள்ளார், அதனால் அவளுக்கு என்ன உடை அணிய வேண்டும் என்று அவள் முடிவு செய்வார்” என்று தெரிவித்துள்ளார்.    

ஜோதிகா செய்யலாம் ஆனால் என் பொண்ணு செய்தால் தப்பா?.. வனிதா விஜயகுமார் ஆதங்கம் | Vanitha Open Talk About Jyothika


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *