ஜீ தமிழில் மணிமேகலை தொகுத்து வழங்கும் சிங்கிள் பசங்க Judges இவர்களா?

மணிமேகலை
தடை அதை உடை என்பதற்கு ஏற்ப தனது வாழ்க்கையில் எதிர்க்கொள்ளும் சவால்களை தைரியமாக சந்தித்து சாதித்து வருகிறார் மணிமேகலை.
அவர் திருமணமே பெரிய சவால்களுக்கு இடையில் தான் நடைபெற்றது, பின் விஜய் டிவி பக்கம் வந்தவர் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, போட்டியாளராக கலக்குவது என இருந்தார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது அந்த குழுவுடன் பிரச்சனை ஏற்பட தொலைக்காட்சி விட்டே வெளியேறினார்.
ஜீ தமிழ் பக்கம் வந்தவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
புதிய ஷோ
டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தற்போது அதே தொலைக்காட்சியில் புதிய ஷோ ஒன்றில் கமிட்டாகியுள்ளார் மணிமேகலை.
சிங்கிள் பசங்க என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.
இந்த ஷோவில் நடுவர்களாக இயக்குனரும், நடிகருமான பார்த்திபன், நடிகை ஸ்ருத்திகா மற்றும் சீரியல் நடிகை ஆல்யா மானசா ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்களாம்.