ஜி.வி. பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு.. அடுத்த மாதம் தீர்ப்பு..

ஜி.வி. பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு.. அடுத்த மாதம் தீர்ப்பு..

ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், பின்னணி பாடகி சைந்தவி கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அன்வி என்கிற மகள் உள்ளார்.

ஜி.வி. பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு.. அடுத்த மாதம் தீர்ப்பு.. | Gv Prakash Saindhavi Divorce Case

12 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தங்களது பிரிவை அறிவித்தனர். இது ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

மேலும் கடந்த மாதம் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

ஜி.வி. பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு.. அடுத்த மாதம் தீர்ப்பு.. | Gv Prakash Saindhavi Divorce Case

அடுத்த மாதம் தீர்ப்பு

இந்த நிலையில், விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

ஜி.வி. பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு.. அடுத்த மாதம் தீர்ப்பு.. | Gv Prakash Saindhavi Divorce Case

வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி. பிரகாஷ் நீதிபதி முன் கூறியுள்ளார். இதையடுத்து, இவர்களுடைய விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் 30ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கூறி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *