ஜன நாயகன் படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமை யாருக்கு தெரியுமா? இந்த நிறுவனமா

விஜய்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் மேனன், பாபி தியோல், ப்ரியாமணி என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
யாருக்கு தெரியுமா?
இந்நிலையில், ஜனநாயகன் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமை குறித்து ஒரு அதிரடி தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, இந்த உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. GOAT படத்தை தொடர்ந்து ‘ஜன நாயகன்’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் பிரபல நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.






