சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை…எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

சொத்து விஷயத்தில் குணசேகரன் அதிரடி, ஜனனியின் நிலை…எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ


எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் தொலைக்காட்சியில் Thriller ப்ளஸ் Horror கதையாக உள்ள சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது என்பது ரசிகர்களின் விமர்சனமாக உள்ளது.

அடுத்து என்ன நடக்கும், எப்போதும் சஸ்பென்ஸ், வில்லன்கள் ராஜ்ஜியம் செய்வது, பெண்கள் எப்போதும் அடிபட்டுக்கொண்டே இருப்பது போன்ற கதைக்களம் தான் அதிகம் உள்ளது.

பெண்கள் கொஞ்சம் முன்னேறி ஒரு தொழிலை தொடங்கினார்கள், ஆனால் அதற்குள் வில்லன்கள் கை ஓங்க பெண்களை சுக்கு நூறாக உடைத்துவிட்டார்கள். தொழில் செய்ய முடியவில்லை, ஜனனி புதிய நபரிடம் சிக்கிக்கொள்ள நந்தினி, ரேணுகா வழக்கம் போல் குணசேகரன் பிளானில் சிக்கிக் கொண்டார்கள்.

புரொமோ

தேவசகாயம் என்பவரிடம் சிக்கி ஜனனி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார், ஆனால் அவர் சரியான நபர் இல்லை என்பது மட்டும் அவருக்கு தோன்றுகிறது.

எனவே அவரது இடத்தில் இருந்து தப்பிக்க முயற்சிக்கிறார், ஆனால் முடியாமல் போகிறது, அங்கேயும் அடிதடி நடக்கிறது. இங்கு குணசேகரன் விசாலாட்சியை மிரட்டி கையெழுத்து போட வைக்கிறார்.

ஏதோ சொத்து பிரச்சனையாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது, அப்படி கையெழுத்து போடவில்லை என்றால் கொன்று விடுவோம் என கதிர் மிரட்டுகிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *