சென்சேஷனல் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த்.. வெளிவந்த போஸ்டர் இதோ

சென்சேஷனல் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த்.. வெளிவந்த போஸ்டர் இதோ


பிரஷாந்த்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் டாப் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் பிரஷாந்த். இவர் நீண்ட காலம் கழித்து ஹீரோவாக நடித்து வெளிவந்த அந்தகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சென்சேஷனல் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த்.. வெளிவந்த போஸ்டர் இதோ | Actor Prashanth Next Movie Title Poster

இதை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்திருந்த GOAT திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்பின், இயக்குநர் ஹரி இயக்கத்தில் பிரஷாந்த் நடித்து வருகிறார்.

இதை தவிர, தனது தந்தையும் பிரபல இயக்குநருமான தியராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் பிரஷாந்த் நடித்து வருவதாக தகவல் வெளியானது. 

ரஞ்சன் தி அட்வகேட்



இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு ரஞ்சன் தி அட்வகேட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சென்சேஷனல் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிகர் பிரஷாந்த்.. வெளிவந்த போஸ்டர் இதோ | Actor Prashanth Next Movie Title Poster



கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றிபெற்ற திரைப்படம் Court: State vs a Nobody. இப்படத்தைதான் தற்போது ரஞ்சன் தி அட்வகேட் என்கிற தலைப்பில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். விரைவில் இப்படம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *