சுந்தந்திர தினத்தில் பிறந்த நடிகர் அர்ஜுனின் மொத்த சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

அர்ஜுன்
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் அர்ஜுன். இவரை ஆக்ஷன் கிங் அர்ஜுன் என செல்லமாக அழைப்பார்கள். ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், முதல்வன், ஏழுமலை, ரிதம் என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
மேலும் லியோ, விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து மிரட்டியுள்ளார். அர்ஜுனுக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கடந்த ஆண்டு நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுடன் திருமணம் நடைபெற்றது.
அடுத்ததாக அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜுனுக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. சமீபத்தில்தான் தனது வருங்கால கணவரை அஞ்சனா அறிமுகம் செய்து வைத்தார். அந்த புகைப்படங்கள் கூட வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
இன்று 79வது சுந்தந்திர தினம் மட்டுமின்றி, இன்று தான் நடிகர் அர்ஜுனின் பிறந்தநாள் ஆகும். சுதந்திர தினத்தில் தனது 63வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் அர்ஜுனுக்கு தனது வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், அர்ஜுனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 80 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.