சீரியல் நடிகர் அவினாஷிற்கு குழந்தை பிறந்தது… போட்டோவுடன் நடிகர் போட்ட பதிவு

நடிகர் அவினாஷ்
சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியல் மூலம் சின்னத்திரை நடிகராக அறிமுகமானவர் அவினாஷ்.
குழந்தை நட்சத்திரமாக டான்ஸ் நிகழ்ச்சிகளில் ஆட தொடங்கியவர் நிறைய நடன நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளார்.
அழகு சீரியல், நடன நிகழ்ச்சி பின் சன் டிவியிலேயே ஒளிபரப்பான கயல் சீரியல் என நடித்து வந்தவர் விஜய் டிவி பக்கம் வந்து ஜோடி ஆர் யு ரெடி நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
அதோடு வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற சீரியலிலும் நடித்து வந்தார்.
குழந்தை
13 வருடங்களாக காதலித்து மரியா என்பவரை கோலாகலமாக பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்தார் அவினாஷ். கடந்த சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்கள்.
இந்த நிலையில் கடந்த ஜுன் 13ம் தேதி இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவினாஷ் குழந்தை புகைப்படத்துடன் இந்த செய்தியை அறிவித்துள்ளார்.