சிவக்குமாரின் சிக்ஸ்பேக் பேச்சுக்கு பதிலடி.. ரியாஸ் கான் மனைவி போட்ட பதிவு

சிவக்குமாரின் சிக்ஸ்பேக் பேச்சுக்கு பதிலடி.. ரியாஸ் கான் மனைவி போட்ட பதிவு


நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். அவர் நடித்த ரெட்ரோ படத்தின் விழாவில் அவரது அப்பா நடிகர் சிவக்குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி சமூக வலைத்தளங்களில் கடும் ட்ரோல்களுக்கு காரணமாக அமைந்து இருக்கிறது. 

‘தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு முன் எவண்டா சிக்ஸ் பேக் வைத்தது?’ என சிவக்குமார் பேசி இருந்தார்.

அது பற்றி சமீபத்தில் பேசிய நடிகர் விஷால், ‘முதலில் தனுஷ் தான் பொல்லாதவன் படத்தில் சிக்ஸ் பேக் வைத்திருந்தார். அதன் பின் நான் வைத்திருந்தேன். அதற்கு பிறகு தான் சூர்யா’ என கூறி இருந்தார்.

சிவக்குமாரின் சிக்ஸ்பேக் பேச்சுக்கு பதிலடி.. ரியாஸ் கான் மனைவி போட்ட பதிவு | Uma Riyaz Khan Hits Back At Sivakumar Sixpack

உமா ரியாஸ் கான் பதிலடி

வின்னர் படத்தில் கட்டதுரையாக நடித்து இருந்த நடிகர் ரியாஸ் கானின் மனைவி தற்போது சிவக்குமார் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டு இருக்கிறார்.

ரியாஸ் கான் சிக்ஸ் பேக் உடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து இருக்கும் அவர், சிவக்குமார் பேசும்போது கட்டதுரை ‘கேக்கல’ என சொல்வது போன்ற ஒரு மீம் ஒன்றையும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.

அவரது பதிவு இதோ. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *