சிவகார்த்திகேயனின் மதராஸி பட இசை வெளியிட்டு விழா எப்போது?.. அதிரடி தகவல்

சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியானது.
படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது. அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் நடித்துள்ளார்.
எப்போது?
இப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், மதராஸி படத்தின் இசை வெளியிட்டு விழா குறித்து தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, வரும் ஆகஸ்ட் 24ம் தேதி சென்னை சாய் ராம் கல்லூரியில், இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.