சிம்புவுடன் நயன்தாராவை நடிக்க வைத்தது எப்படி.. மனம் திறந்து பேசிய இயக்குநர் பாண்டிராஜ்

தலைவன் தலைவி படம் தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தின் மூலம் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். இந்நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில், பிரேக் அப் செய்துகொண்ட ஜோடி நயன்தாரா – சிம்புவை எப்படி மீண்டும் இது நம்ம ஆளு படத்தில் நடிக்க வைத்தீர்கள் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
மனம் திறந்து பேசிய பாண்டிராஜ்
“இது நம்ம ஆளு திரைப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடிக்க நடிகை நஸ்ரியாவை தான் முதன் முதலில் நினைத்தேன். அப்போ ராஜா ராணி படம் வந்து நல்ல போயிட்டு இருந்தது. நஸ்ரியாவுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. சுமார் 20 நாட்கள் ஹீரோயினை கமிட் செய்யாமலே சிம்புவை வைத்து மட்டுமே போன் பேசும் காட்சிகளை எடுத்தேன். அந்த பக்கம் யார் நடிக்க போறாங்கன்னு தெரியாமலே சிம்பு நடித்தார்.
நயன்தாரா – சிம்பு
திடீரென ஒரு நாள் இந்த படத்தில் சிம்பு – நயன்தாரா இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என தோன்றியது. சிம்புவிடம் நயன் நடித்தால் உங்களுக்கு ஓகேவா என கேட்டேன். அவங்க நடிக்க ஓகே சொன்னால், எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்றார். நம்ம படத்துக்கு பாலசுப்ரமணியம்தான் ஒளிப்பதிவாளர். அவர்தான் இது கதிர்வேலன் காதல் படத்துக்கும் ஒளிப்பதிவாளர். நயன்தாராவிடம் அவர்தான் பேசினார்.
சிம்புவுடன் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, கதை பிடித்திருந்தால் பண்றேன்னு சொல்லிவிட்டார். நான் நயனிடம் போனில் கதை சொல்லும் போதே, அவர் சிரித்து சிரித்து கதை கேட்டார். அதன்பின், படப்பிடிப்பு சென்று அந்த படத்தை ஒருவழியாக முடித்துவிட்டோம்” என பாண்டிராஜ் கூறியுள்ளார்.